
இன்று காலை எதிர்பாராத விதமாக கலைஞர் உண்ணா விரதம் மேற்கொண்டார். இதனால் கலைஞர், சண் தொலைக்காட்சிகளின் நாளாந்த ஒளிபரப்பு பாதிப்புக்குள்ளானது. பலதரப்பிலும் உண்ணாவிரத நாடகம் மெகா சீரியலைவிட போரடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உண்ணாவிரதம் நிறைவடைந்தது. கலைஞர், சன் தொலைக்காட்சிகள் வழமைக்குத் திரும்பின
கலைஞர் உண்ணாவிரதம் நிறைவு ஏன் ?
Posted by
குழவி
at
10
comments
Labels: அரசியல், கலைஞர், செய்தி விமர்சனம், விளம்பரம்
தமிழ்மணத்தில் தெரிவது..
Posted by
குழவி
at
7
comments
Labels: கருத்துப்படம், கும்மி, புலி, பூனை, மொக்கை, விளம்பரம்
விளம்பர சேவை (காசு பார்க்கலாம்)
குழவிக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் அன்மையில் புதிய தொழில் தொடங்கி தொழிலதிபர் ஆயிட்டார். முதல் மாதத்தில் நிகரலாபம் கூடக் கண்டாக தொலைபேசியில் சொன்னார். இதைக் கேட்டதும், குழவிக்கும் தொழிலதிபர் ஆகும் ஆசை வந்திட்டுது. என்ன செய்யலாம் என்று யோசித்து பிடித்ததுதான் இந்த ஐடியா.
வலைப்பதிவே வாழ்வாகக் கிடக்கும் என்னைப் போன்ற வேலைவட்டி இல்லாததுகளுக்கு வேறென்ன செய்ய முடியும். அதனால் வலைப்பதிவிலிலேய சம்பாதிக்க முடிவு பண்ணியாச்சு.
உங்களுக்குத் தேவையான, ,தேவை, தேடப்படுதல், கானவில்லை, படவிளம்பரம், வீடியோ விளம்பரம், ஒலிப்பதிவு விளம்பரம், என அனைத்துவகை விளம்பரங்களும், குறைந்த கட்டணத்தில் வலைப்பதிவுலகில் செய்துதரப்படும். எம்மூலம் விளம்பரம் செய்வோருக்கு தேவையான (பன்னி, கழுதை, நாய், கோழி, குரங்கு, கடவுளர்) படங்கள் பலவித வடிவத்தில் இலவசமாக வழங்கப்படும். அவை நீங்கள் விரும்பும் வகையில் மாற்றியும் தரப்படும்.
தொடர்புகளுக்கு:
விவரம் தெரியாதவன் விளம்பர சேவை.
வீனாய் போனவன் அவென்யு
பாரீஸ் புறநகர்.
பிரான்சு.
Posted by
குழவி
at
9
comments



