இன்று காலை எதிர்பாராத விதமாக கலைஞர் உண்ணா விரதம் மேற்கொண்டார். இதனால் கலைஞர், சண் தொலைக்காட்சிகளின் நாளாந்த ஒளிபரப்பு பாதிப்புக்குள்ளானது. பலதரப்பிலும் உண்ணாவிரத நாடகம் மெகா சீரியலைவிட போரடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உண்ணாவிரதம் நிறைவடைந்தது. கலைஞர், சன் தொலைக்காட்சிகள் வழமைக்குத் திரும்பின
கலைஞர் உண்ணாவிரதம் நிறைவு ஏன் ?
Labels: அரசியல், கலைஞர், செய்தி விமர்சனம், விளம்பரம்
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
மலிவான நகைச்சுவை...
ரசிக்க முடிய்வில்லை...
ஏதேனும் நல்லது நிகழ்ந்துவிடாதா என பரிதவித்தவனுக்கு இந்த உண்ணா நிலையின் மூலம் ஏதோவொரு பரிகாரம் கிடைத்திருக்கிறதே என்பதை எண்ணி திருப்தியடையவிடாமல் எது உங்களை தடுக்கிறது?
இந்திய ஊடகங்கள் தான் போர்நிறுத்தம் என்று சொல்கின்றதே தவிர வேறெந்த ஊடகங்களிலும் இல்லை. மீண்டும் ஒரு நாடகம் அப்பட்டமாக படுதோல்வி அடைந்துள்ளது. உண்மையிலேயே ஒருகணம் சந்தோசப்பட்டேன் ஆனால் அதை பொய்யாக்கி விட்டார் கருணாநிதி. இந்திய ஊடகங்கள் எப்பொழுது தான் குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டுவதிலிருந்து வெளிவரப்போகுதோ தெரியவில்லை.
//மலிவான நகைச்சுவை...
ரசிக்க முடிய்வில்லை...//
அதே. மலிவான நாடகம்... ரசிக்க முடியவில்லை.
//ஏதேனும் நல்லது நிகழ்ந்துவிடாதா என பரிதவித்தவனுக்கு இந்த உண்ணா நிலையின் மூலம் ஏதோவொரு பரிகாரம் கிடைத்திருக்கிறதே என்பதை எண்ணி திருப்தியடையவிடாமல் எது உங்களை தடுக்கிறது?//
ஒன்னும் கிடைக்கல்ல தலைவா..
நானும் போர் நிறுத்தம் தான் வந்து விட்டதோ என கருணாநிதியின் நாடகத்தால் ஏமாந்து விட்டேன் . மீண்டும் மீண்டும் தமிழினத்தை ஏமாற்றும் கருணாநிதி
//மலிவான நகைச்சுவை...
ரசிக்க முடிய்வில்லை...//
அதே. மலிவான நாடகம்... ரசிக்க முடியவில்லை.
:'(
வாழ்க இவர்களின் பிண அரசியல்....
நீங்கள் சொல்வது சரி. அரசு வேலைநிறுத்தத்தின்போதே டிவியில் படம் போட்டுக் காசு பார்த்தவர்களாயிற்றே.
இலங்கையில் போர் நிறுத்தப்படவில்லை: சிதம்பரத்துக்கு ராஜா கண்டனம்
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா,
இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்துவிட்டதாக சிதம்பரம் அறிவித்துள்ளது மிகைப்படுத்தப்பட்டுள்ள தகவல். இலங்கை அரசு முமுமையாக போரை நிறுத்திவிடவில்லை. அப்படி செய்யவும் மாட்டார்கள். தமிழர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதாக இலங்கை அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என்றுதான் கூறியிருக்கிறது. சிதம்பரம் இலங்கை அரசுக்கு வக்காளத்து வாங்கும் விதத்தில் பேச கூடாது. இலங்கை அரசின் அறிவிப்பை போர் நிறுத்தம் என மிகைப்படுத்தி சொல்லக் கூடாது என்றார்.
//கலைஞர் உண்ணாவிரதம் நிறைவு ஏன் ?//
பசிதான்
அப்படிப் போடு!
மனம் வேதனையிலும் சலிப்பிலும் உள்ளது.
இந்த வயதில் கலைஞர் கருணாநிதி ஏன் இப்படி எல்லாம் செகிறார் என்று விரக்தியாக உள்ளது.அது மட்டுமல்ல பல உயிர்களோடும் ஒரு இனத்தின் பல ஆண்டு கால உரிமைப் போராட்டத்தோடும் சம்பத்தப்பட்ட ஒரு விஷயத்தை தேர்தல் நாடமாக்கி விட்டார்களே என்று ஆதங்கமும் உண்டாகிறது.
இலங்கை அரசுக்கு சில தினங்களுக்குமுன்பு அமெரிக்க எச்சரிக்கை விட்டிருந்தது .இலங்கை அரசு தனது நடவடிக்கையை நிறுத்தாவிட்டால் அதன் ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து வந்துவிடும் என்று அமெரிக்கா கூறியிருந்தது,அத்துடன் உலகவங்கியின் கடனும் கிடைக்காமல் விடும் என்ற எச்சரிக்கையையும் விட்டிருந்தது ,இலங்கை ராணுவம் நடத்தும் போர்க்குற்றங்களை செய்மதி ஊடாக அமெரிக்கா படம் பிடிப்பதாகவும் தகவல் வந்தது.
சமீப காலமாக புலம்பெயர் தமிழர்கள் நடத்தும் போராட்டங்கள் வெளிநாடுகளில் உள்ள ,தமிழ் அமைப்புக்கள் பின்புலத்தில் செய்யும் பல அரசியல் சந்திப்புக்கள் என்பன கொஞ்சம் கொஞ்சமாக உலக அரங்கில் மாற்றங்களை செய்து வருகிறது.
என்றாலும் திட்டவட்டமான போர் நிறுத்தம் இன்னும் வரவில்லை.
இந்த நேரத்தில் தமக்கு தேர்தல் களத்தில் தண்டனை காத்திருக்கிறது என்ற பயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சொல்லிகொடுத்தபடி கலைஞர் ஏதோவெல்லாம் செய்கிறார்.
தேர்தல் என்று வந்துவிட்ட படியால் இன்று தலைவர்கள் மட்டுமல்ல ஆதரவாளர்களும் தேர்தல் காய்ச்சலால் பீடிக்கப் பட்டுவிட்டார்கள்.அதன் வெளிப்பாடுதான் சில பதிவர்களின் கோபமான பதிவுகளும் பின்னூட்டங்களும்
பலரும் கேட்கிறார்கள் ஏன் எல்லோரும் கலைஞரை மட்டும் குறை கூறுகிறார்கள் என்று
காரணம் இதுதான்
பல காலமாக தமிழர்களின் நம்பிக்கைக்கு பத்திரமாக இருந்தவர் இன்று ஈழத்தமிழரின் மிக முக்கியமான கால கட்டத்தில் தீர்க்கமான உறுதியான முடிவு எடுக்காமல் தனது பதவிக்காகவும் குடும்ப நலனுக்காகவும் தவறாகச் செயல்பட்டுவிட்டாரே என்ற ஆதங்கம்.எங்களுடன் பாசம் காட்டாதவர்கள் எங்களுக்கு எதிராக செயல்பட்டால் அது மனதைப் பாதிக்காது,ஆனால் அம்மாவும் சகோதரனும் நாங்கள் கஷ்டத்தில் இருக்கும்போது எங்களுக்கு உதவி செய்யாவிட்டால் அல்லது எங்களுக்கு எதிரானவர்களுக்கு துணை போனால் அது எங்களை மிகவும் பாதிக்கும் அல்லவா?
ஆறு மாதத்துக்கு முன்பு கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டார் என்பதால்தான் இவ்வளவு மனத்தாங்கல்.
கலைஞர் ஐந்து மணி நேரம் உண்ணாவிரதம் செய்தார் என்பதற்காக இலங்கையின் கொடுங்கோல் ராஜபக்சாக்களும் பொன்சேகாவும் போர் நிறுத்தம் செய்தார்கள் என்பதை சிலர் நம்புகிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது.
இன்றும் வன்னியில் பல மக்கள் கொல்லப் பட்டு இருக்கிறார்கள். .
கடைசி நேரத்தில் கூட கலைஞர் இப்படி அரசியல் ஆதாயம் தேடுகிறார்.
இது அவரின் வயதுக்கும் அனுபவத்துக்கும் பொருத்தமாக இல்லையே?
-வானதி
Post a Comment