இன்று தமிழகத்தில் திமுகவின் பலமான பந்தை கண்டு பயந்து போய், இலங்கையில் போர்நிறுத்தத்தை ராஜபக்சே உடனடியாக அறிவித்துவிட்டார். ஏற்கனவே கலைஞர் பிரபாகரன் தன் நண்பர் எனப் பலமாக எச்சரித்திருந்ததாலும், திமுகவினர் பந்து நடத்தின பக்குவத்தையும் கண்டு அச்சமுற்று, அவசரமாக நடுங்கிக் கொண்டே இந்த அறிவிப்பை செய்திருப்பதாக நம்பப்படுகிறது. இந்த வெற்றியைக் கொண்டாடு முகமாக விரைவில் சென்னையில் மாபெரும் வெற்றிவிழாக் கொண்டாடப்படுமெனவும், இந்த விழாவில் பங்குகொள்ளஉலகின் பலபகுதிகளிலும் இருந்து ஈழத்தமிழர்கள் பலர் கலந்து கொள்வார்கள் எனவும், இதில் மானாட மயிலாட கலைஞர்களால் வெற்றி கொண்டான் எனும் மாபெரும் நடன நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
- கலைஞர் செய்தி
இன்றைய குரல் - கூரை ஏரி கோழி புடிக்கத் தெரியாதவன் வானமேறி வைகுந்தம் போனானாம்.
இலங்கையில் திடீர் போர்நிறுத்தம்
Labels: அரசியல், கலைஞர், செய்தி, செய்தி விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
nach punch!
அதென்னமோதெரியவில்லை.மொக்கைக்கும்,நையாண்டிக்கும்,ஜோசியத்துக்கும்வரிசையில் நின்று பின்னூட்டம் போடும் பதிவர்கள் தமிழக அரசு,நடுவணரசுகளின் கையாலாகாதத்தனத்தைக் கண்டித்து பின்னூட்டமே போடுவதில்லை.நமக்கேன் வம்பு?என்று நழுவுகிறார்களோ!
செத்துக்கொண்டிருப்பது நம் இனமய்யா.
இது கலைஞருக்கு கிடைத்த அடுத்த வெற்றி , ஏற்கனவே அவர் அனுப்பிய தந்திகளின் எண்ணிகையால் அவருக்கு தபால் தந்தி துறை வேறு பாராட்டுவிழா நடத்த இருக்கின்றது.
இதையெல்லாம் சொன்னா நம்மள பைத்தியம்-பாங்க!
வணக்கம்,
உண்மையான போர் நிறுத்தம் இன்னும் சில தினக்களில் !!!!
ஆம் தோழர்களே, போர் முடிவுக்கு வருகிறது. இனிமேல் நீங்கள் அழத்தேவையில்லை
Post a Comment