குழவிக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் அன்மையில் புதிய தொழில் தொடங்கி தொழிலதிபர் ஆயிட்டார். முதல் மாதத்தில் நிகரலாபம் கூடக் கண்டாக தொலைபேசியில் சொன்னார். இதைக் கேட்டதும், குழவிக்கும் தொழிலதிபர் ஆகும் ஆசை வந்திட்டுது. என்ன செய்யலாம் என்று யோசித்து பிடித்ததுதான் இந்த ஐடியா.
வலைப்பதிவே வாழ்வாகக் கிடக்கும் என்னைப் போன்ற வேலைவட்டி இல்லாததுகளுக்கு வேறென்ன செய்ய முடியும். அதனால் வலைப்பதிவிலிலேய சம்பாதிக்க முடிவு பண்ணியாச்சு.
உங்களுக்குத் தேவையான, ,தேவை, தேடப்படுதல், கானவில்லை, படவிளம்பரம், வீடியோ விளம்பரம், ஒலிப்பதிவு விளம்பரம், என அனைத்துவகை விளம்பரங்களும், குறைந்த கட்டணத்தில் வலைப்பதிவுலகில் செய்துதரப்படும். எம்மூலம் விளம்பரம் செய்வோருக்கு தேவையான (பன்னி, கழுதை, நாய், கோழி, குரங்கு, கடவுளர்) படங்கள் பலவித வடிவத்தில் இலவசமாக வழங்கப்படும். அவை நீங்கள் விரும்பும் வகையில் மாற்றியும் தரப்படும்.
தொடர்புகளுக்கு:
விவரம் தெரியாதவன் விளம்பர சேவை.
வீனாய் போனவன் அவென்யு
பாரீஸ் புறநகர்.
பிரான்சு.
விளம்பர சேவை (காசு பார்க்கலாம்)
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
அண்ணன் கவுண்டமணி டயலாக் ஞாபகம் வருதா ?
புண்ணாக்கு விக்கிறவன்...குண்டுசி விக்கிறவன் எல்லாம் தொழிலதிபர் இன்னிக்கு...நாட்டிலே தொழிலதிபர் தொல்ல தாங்க முடியலேபா..
அவர்தானாம் இப்ப அம்பானிக்கே சவாலாம்
இதில ஆருக்குக் குத்து விழுது?
தமிழ்ப்பித்தனுக்கா அல்லது பிரான்சுக் கூட்டத்துக்கா?
தலைப்ப பார்த்ததும் என்னை மாதிரி "பிளாக் மூலம் சம்பாதிக்கலாம் வாங்க" அப்படினு கோச்சிங் குடிக்குறீங்களோனு நினைச்சேன் :-)
என்ரை இணையம் வேலை செய்யவில்லை. (பில் கட்டவில்லை) இதை ஒரு அறிவித்தலா போட முடியுமோ..? அதையே நான் அறிவிப்பாக வீடியோவில் பதிவு செய்து தந்தால் அதை வெளியிட கூட காசா..
Collapse comments
\\Jahe said...
அண்ணன் கவுண்டமணி டயலாக் ஞாபகம் வருதா ?
புண்ணாக்கு விக்கிறவன்...குண்டுசி விக்கிறவன் எல்லாம் தொழிலதிபர் இன்னிக்கு...நாட்டிலே தொழிலதிபர் தொல்ல தாங்க முடியலேபா..\\
நெசம்தாங்க. அதுமாதிரி இணையப்புரட்சி பண்ணறவங்க தொல்லையும் தாங்க முடியேலேல்ல சாமி
\\தமிழ்பித்தன் said...
அவர்தானாம் இப்ப அம்பானிக்கே சவாலாம்\\
எவரச் சொல்றீங்க தமிழ்பித்தன்.
\\கொண்டோடி said...
இதில ஆருக்குக் குத்து விழுது?
தமிழ்ப்பித்தனுக்கா அல்லது பிரான்சுக் கூட்டத்துக்கா?\\
கொண்டோடி அனைத்தும் அறிந்த உமக்குமா புரியவில்லை ?
\\Appaavi said...
தலைப்ப பார்த்ததும் என்னை மாதிரி "பிளாக் மூலம் சம்பாதிக்கலாம் வாங்க" அப்படினு கோச்சிங் குடிக்குறீங்களோனு நினைச்சேன் :-)\\
நினைத்ததெல்லாம் நடந்து விட்டால்..
Post a Comment