இந்தியாவிற்கு இலங்கை தரும் விரு(ந்)து

ஈழத்தில் இந்தியா புரியும் யுத்த உதவிகள், இராணுவ உதவிகள் சரியென்கிறீர்களா? அப்படியானால், இந்து - ராம், காங்கிரஸ் - தலைவர்கள், ஜெ அம்மா, சோ அய்யா, புதிதாக இன்போசியஸ் நாரயணன், மற்றும் , அமைச்சர்கள் பிராணப் முகர்ஜி, சிவசங்கர் மேனன், எம்.கே நாராயணன், ஆகியோருக்கு , சிறிலங்கா அரசு வழங்கும் தலைவாழை விருந்து நிச்சயம் உங்களுக்கம் கிடைக்கும்.






கலைஞருக்கு விருது வழங்கும் விழா




உடன் பிறப்பே!

தமிழ் காத்த காவலர், எம் இனத்தின் தலைமகன், அருணாநிதி அய்யாவுக்கு விருது வழங்கும் திருவிழாவுக்கு அன்போடு அழைக்கிறோம். நிகழ்ச்சியில் பிரபல கவிஞர் கலந்து கொள்ளும் சிறப்புக் கவியரங்கம் இடம்பெறும்.
கவியரங்கில் கலந்து கொள்வோர்.
பேரரசு: பொன்முத்து
உரைஞர்: லாலி
தனிமொழி
மான்விழி
பாவி.ஜெய்
ஈழத்துக் கவிஞர்: தங்கராசு

நிகழ்ச்சியின் இறுதியில் தமிழக்காவலரைப் பாராட்டி தங்கக் கைத்தடி விருது வழங்கப்படும்.
விருதுக்கான காரணத்தை சொல்ல மறந்துட்டோம்.
ஈழத்தமிழ மக்கள் பிரச்சனையில் அதிக தீர்மானங்கள் எழுதியமைக்காக..