அவல நெனச்சு..


இதனால் நான் கொல்லப்படலாம்.



2006 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி திருகோணமலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களில் ஒருவரான ஹேமச்சந்திரனின் தந்தையான பொன்னுத்துரை யோகராஜா இந்தச் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவால் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் தொடர்ந்தும் சாட்சியமளிக்கையில் " சாட்சியமளிப்பதால் நான் கொல்லப்படலாம் " எனத் தெரிவித்தார்.


நேற்று முன்தினம் இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின் தொடர்ச்சியாக நேற்று இடம்பெற்ற விசாரணையில் சாட்சியமளிக்கும் போதே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ஹேமச்சந்திரனின் தந்தையான பொன்னுத்துரை யோகராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் சாட்சியமளிக்கையில்;


`எனது மகனின் நண்பர்கள் அனைவரையும் எனக்குத் தெரியாது. ஆனால், றொகான், சயநிதன், சிவானந்தன் என அழைக்கப்படுபவர்களை எனக்குத் தெரியும்.


இதில் றொகான், சயநிதன் ஆகியோர் இச்சம்பவத்திலே இறந்து விட்டனர்.


சம்பவ தினத்தன்று நான் விசேட அதிரடிப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து எனது வீட்டிற்குச் சென்று சம்பவத்தைப் பற்றி மனைவிக்குச் சொல்லும் போது சண்முகராஜாவும் அங்கு வந்திருந்தார்.


பின்னர் நானும் சண்முகராஜாவும் சைக்கிள்களில் மருத்துவமனையை நோக்கிச் சென்றோம். மருத்துவமனை எனது வீட்டிலிருந்து கால்மைல் தூரத்தில் உள்ளதால், நாங்கள் மருத்துவமனையைச் சென்றடைய பத்து நிமிடங்கள் பிடித்தது. மருத்துவமனையின் நுழைவாயிலில் வைத்தியர்களும் தாதியர்களும் இந்தச் சம்பவம் பற்றி அறிந்திருந்ததால் காயமடைந்தவர்களோ அல்லது சடலங்களோ அங்கு வருமென எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.


நாங்கள் அங்கு சென்ற 5 நிமிடங்களில் பொலிஸாரின் ஜீப் ஒன்று அங்கு வந்தது.


நான் ஓடிச் சென்று ஜீப்பின் பின்புறம் பார்த்த போது இரு உடல்கள் அதற்குள் கிடந்தன. உடனே ஜீப்பினுள் ஏறி இவ்வுடல்கள் யாருடையதாக இருக்குமெனப் புரட்டியும் தூக்கியும் பார்த்த போது உடல்கள் முழுவதும் இரத்த மயமாக இருந்தன. அதில் எனது மகனின் உடல் இருக்கவில்லை.


ஜீப்பிலிருந்து சாரதி மட்டுமே இறங்கி வெளியே நின்றிருந்தார். அவர் அருகில் இருந்தவர் கீழே இறங்கவில்லை. அத்துடன், ஜீப்பிலிருந்து உடல்களைக் கீழே இறக்குவதற்கு அவ்விருவரும் உதவி செய்யவுமில்லை.


உடல்கள் இரண்டும் இளைஞர்களுடையவையாக இருந்தன. அந்த உடல்கள் கீழே இறக்கப்பட்டதையடுத்து ஜீப் சென்று விட்டது. அதனைத் தொடர்ந்து ஓரிரு நிமிடங்களின் பின் இரண்டு ஜீப்கள் ஒன்றன் பின் ஒன்றாக அங்கு வந்தன. அந்த ஜீப்களிலும் ஏறி உடல்களைச் சோதித்துப் பார்த்தேன். ஆனாலும், எனது மகனின் உடலை அடையாளம் காண முடியவில்லை.


நாய்களைச் சுட்டுப் போட்டது போலவே அவர்களின் உடல்களை ஜீப்பினுள் குவித்திருந்தார்கள். இவ்விரு ஜீப்களையும் பொலிஸாரே ஓட்டி வந்ததுடன், சாரதிக்கு அருகிலும் பொலிஸார் ஒருவரே இருந்தார். இரண்டாவது ஜீப்பிலிருந்து நானும் மருத்துவமனை கங்காணி ஒருவரும் உடல்களை இறக்கினோம்.


இவற்றைத் தொடர்ந்து வந்த மூன்றாவது ஜீப்பில் ஏறிப் பார்த்த போது அதிலிருந்த இரு உடல்களில் ஒன்று எனது மகனுடையது. இதனால், அதிர்ச்சியடைந்து குழப்பமடைந்தேன். அதனைத் தொடர்ந்து பிணவறைக்குச் சென்ற போது அங்கே ஏழு உடல்கள் இருந்தன. அவற்றில் ஐந்தை அங்கேயே வைக்குமாறும் இரண்டை சத்திரசிகிச்சை அறைக்குக் கொண்டு செல்லுமாறும் அங்கிருந்த மருத்துவர்கள் கூறினர். ஆனால், எனது மகனின் உடல் இறந்தவர்களின் உடல்களுடனேயே கிடந்தது. அவரின் காதுகளிலிருந்து இரத்தம் குழாய் ஒன்றிலிருந்து நீர் வருவதைப் போல் வந்து கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அரை மணித்தியாலம் எனக்கு பெரும் மனக்குழப்பம் ஏற்பட்டது. என்ன நடக்கின்றதென்பது தெரியாத நிலையில் நான் இருந்தேன்.


அடுத்த நாள் காலையில் மரண விசாரணை நடந்தபோது அங்கே சற்று முறுகல் நிலை நிலவியது. எனது மகனை விடுதலைப்புலி எனக்கூறி தாள் ஒன்றில் கையொப்பமிட்டால் தான் உடலைத் தருவதாக அங்கு நின்ற பொலிஸ் அதிகாரிகள் வற்புறுத்தினர்.


எனது மகன் ஒரு மாணவன். அவனை ஒரு புலியென நான் எவ்வாறு ஒப்பமிட முடியும், அவனுக்கும் அவ்வமைப்பினருக்கும் இடையில் எதுவிதமான தொடர்புகளும் இல்லை.


க.பொ.த.உயர்தரப் பரீட்சையை முடித்தபின் பல்கலைக்கழகம் செல்வதற்காகவும் பெறுபேறுகளுக்காகவும் காத்திருக்கும் ஒரு மாணவனை நான் எப்படி விடுதலைப் புலியென ஒப்பமிட முடியும். எனினும், விடுதலைப் புலியென ஒப்பமிட்டால்தான் எனது மகனின் உடலை என்னிடம் தருவார்களெனின் எனக்கு அவரின் உடல் தேவையில்லை. நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் எனக் கூறினேன்.


எனது மகன் ஒரு மாணவன், அவன் விடுலைப் புலியாக இருந்தால் இலங்கையில் உள்ள தமிழ் பாடசாலைகளில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் விடுதலைப் புலிகளா? என்று கேள்வி எழுப்பினேன். அதனைத் தொடர்ந்து ஒருசில மணிநேர இடைவெளியில், அப்போது முற்பகல் பதினொரு மணியாக இருக்குமென்று நினைக்கிறேன். அங்கு வந்த பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரால், உடல்கள் அனைத்தையும் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து உடல்கள் எம்மிடம் வழங்கப்பட்டன.


இதனைத் தொடர்ந்து தான் நீதிமன்றிலும் இது தொடர்பாக விசாரிக்கப்படுவதாக டாக்டர் மனோகரன் மூலம் அறிந்துகொண்டேன்.


இதற்காக நான் நீதிமன்றம் சென்றபோது அங்கிருந்த ஒரு தமிழ் பொலிஸ்காரர் குறிப்பிட்ட தூரத்தில் நின்ற ஒருவரை சுட்டிக்காட்டி இவரும் உங்கள் மகன்களின் கொலையில் சம்பந்தப்பட்டுள்ளவரெனக் கூறினார்.


ஆனால், அவரை எனக்குத் தெரியவில்லை. அவரின் முகத்தையும் நான் பார்க்கவில்லை. ஞாபகமும் இல்லை. அவரை அன்றுதான் கண்டிருந்தேன். அதற்கு முன்னரோ பின்னரோ காணவில்லை.


சண்முகராஜா தான் அந்தத் தமிழ் பொலிஸ் அதிகாரியை எனக்குக் காட்டியிருந்தார். சம்பவம் நடைபெற்ற 90 ஆவது நாள் காந்தி சிலையடியில் நினைவு நிகழ்வொன்று பாடசாலை மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


அதில் பௌத்த மதகுரு ஒருவரும் பங்குபற்றியிருந்தார். கொல்லப்பட்ட ஐந்து பேரது பெற்றோர்களும் இதில் பங்குபற்றியிருந்தனர்.


நானும் எனது மனைவி, பிள்ளைகளும் பங்குபற்றினோம். குறிப்பிட்ட எண்ணிக்கையானோரே இதில் கலந்துகொண்டனர்.


காலை 10 மணியளவில் இந்நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அவ்வீதியால் வந்த வாகனங்களின் சாரதிகள் இதற்கு மரியாதை செலுத்தும் வகையில் வீதியில் செல்லாமல் தாமாகவே வாகனங்களை நிறுத்தினர்.


இந்நிலையில் கபில ஜெயசேகர என்னும் பொலிஸ் அதிகாரி நிகழ்ச்சி நடைபெற்றபோது, அவ்வீதியால் வாகனத்தில் வேகமாகச் சென்றதாக பின்னர் சிலர் மூலம் அறிந்தேன்.


பின்னர், நினைவு நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்திற்கு வந்த கபில ஜெயசேகரவும் நான்கு, ஐந்து பொலிஸாரும் நிகழ்வு இடம்பெற்ற இடத்திற்கு முன்னால் வந்து நின்றனர்.


அங்கு வந்திருந்த இறந்தவர்களின் குடும்பத்தவர்களை அச்சுறுத்தவே அவர்கள் அங்கு வந்திருந்தனர். அத்துடன் கபில ஜெயசேகரவின் கட்டளையின் படியே விசேட அதிரடிப்படையினர் செயற்பட்டுள்ளனர். அங்கிருந்த 24 விசேட அதிரடிப்படையினரும் கபில ஜெயசேகரவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தார்கள்.


நீதிமன்றில் என்னால் சாட்சியத்தை சுதந்திரமாக வழங்கக்கூடிய சூழ்நிலை இருக்கவில்லை. எனது பிள்ளைகள் அதற்கு அனுமதிக்கவுமில்லை. ஏனெனில், உண்மையைக் கூறினால் மிஞ்சியுள்ள தங்களையும் அவர்கள் கொலைசெய்து விடுவார்கள் என்ற அச்சமே அதற்குக் காரணம்.


இந்நிலையில் `அக்ஷன் பாம்' நிறுவனத்தில் பணியாற்றும் எனது மூத்த மகன் எட்டாம் மாதம் இரண்டாம் திகதி 2006 ஆம் ஆண்டு வீட்டிலிருந்து கடமைக்குச் செல்வதாகக் கூறி மூதூர் சென்றுவிட்டார். மூன்றாம் திகதியும் அவர் என்னுடன் கதைத்தார். நான் அவரைப் பாதுகாப்பாக இருக்குமாறு கூறினேன்.


இந்நிலையில், ஐந்தாம் திகதி நான் அலுவலகத்தில் இருந்தபோது காலை ஒன்பது மணியளவில் எனது சக ஊழியரின் தொலைபேசிக்கு வந்த அழைப்பில், மூதூரில் தொண்டர் அமைப்பைச் சேர்ந்த 17 பேரை கொன்ற செய்தி தெரியவந்தது. அதில் எனது மகனும் ஒருவர்.


இதனைத் தொடர்ந்து எமக்கு அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகளும் கடிதங்களும் வந்ததுடன், சாட்சி சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியவாறும் வந்துகொண்டிருந்தன.


அதனைத் தொடர்ந்து நான் வேலைக்குச் செல்வதுமில்லை. பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லவுமில்லை.


2008 மாசி மாதம் சமர்ப்பித்த சாட்சியத்தினை விட கூடுதலாகவே நான் இங்கு கூறுகின்றேன். இனி நான் சாட்சியம் வழங்குவதற்கு பயப்பட வேண்டிய தேவை இல்லை. ஏனெனில், எனது இரு பிள்ளைகளை நான் இழந்துவிட்டேன்.


நான் வழங்கும் சாட்சியத்தின் மூலம் உரிய தீர்வொன்று வழங்கப்பட்டு குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.


நான் இறப்பதற்குப் பயப்படவில்லை. எனது இச் சாட்சியம் மூலம் ஏனைய பிள்ளைகளாவது சுதந்திரமாக வாழும் நிலை ஏற்பட வேண்டும்.


அத்துடன், மதிப்பிற்குரிய இலங்கை ஜனாதிபதி அவர்களே இச் சந்தர்ப்பத்தில் இறந்தவர்களை தங்களின் பிள்ளைபோலக் கருதி நியாயம் கிடைக்க வழிசெய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.


நேற்றைய தினமும் இவரது சாட்சியம் முடிவுறாத நிலையில் இன்றும் தொடர்ந்து நடைபெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூதான இடுகை


தமிழ்மண அரங்கில் 'கவுஸ்புல்' காட்சி




எவன்டீசொன்னது?



ஆணி
புடுங்கி
அசந்து
கிடக்கையில்
பீரு
சொல்லாது
எவன்
டீ
சொன்னது?

நிமித்தப்போறியளோ?, பொத்தப்போறியளோ?



எக்சுச்மி தோலர். சூடாகுமா?

கத கதையாம்..கன கதையாம்

செல்லடிச்சதில சின்னனா தப்பிச்சார்
கிபீர் அடிச்சதில பங்கர் கிடங்கில விழுந்தார்
கர்நாடகாவில கைக்காயத்துக்கு வைத்தியம் நடக்குது
மனைவியிட்டப் பொறுப்புக் குடுத்திட்டு மறைஞ்சிருக்கிறார்
கத கதையாய் கன கதை கண்டபடி கதைச்சினம்
கூடச்சில பேர் ஆமாகூடப் போட்டிச்சினம்
ஆனா......
அவரு அங்கதான் நிக்காரு.

வந்திட்டுப் போனார் என்டா வக்கத்த கடற்காவல். அங்கிட்டுத்தான் இருந்தார்னா கத்திக்கிட்டது வெத்து வேட்டு. என்னா நான் சொல்லுறது?