இந்த வீடியோ கிடைக்கும் வரைக்கும் நம்பமுடியாமல்தான் இருந்தது. செய்தியை அறிந்த போது, இப்படியெல்லாம் நடக்குமா என்று கூட எண்ணினோம். ஆனாலும் நடந்துதானே இருக்கிறது என்பதை வீடியோ சாட்சிப்படுத்துகிறதே. என்ன நடந்தது? என்பதை புலனாய்வு செய்த நமது நிருபர் அனுப்பியிருக்கும் வீடியோப் பதிவுகள் அதிர்ச்சி தருபவையாக இருக்கின்றன.
தமிழ்வலைப்பதிவுலகிலும், தமிழ்மணத்திலும், தன் எழுத்துக்களால் தனித்துவமான ஒரு இடத்தை நண்பர்களிடத்தில் பெற்றிருந்தவர், சாரல் வலைப்பதிவினை எழுதும் சயந்தன். இவர் சிலகாலங்களின் முன் ஒரு பதிவுக்காக தன் வீட்டுப்பூனையை படமெடுத்துப்போட்டிருந்தார். (அந்தப்படப்பின் போதே பூனை புறுபுறுத்துக் கொண்டுதானிருந்தது)அதற்குப்பின் அதை வீடியோப் படமெடுத்தும் போட்டிருக்கிறார். ( என்ன விவரம கெட்ட மனுசன் என்டு பாருங்கள். தன்னைப்படமெடுத்துப் போட்டால் அல்லவா பிரபலம் ஆகலாம். அதுக்காக ஆளாளுக்கு எப்பிடி வலைப்பதிவுகளில அலையினம் என்டதைப் பாத்த பிறகாகவது திருந்த வேண்டாமா? அதைவிட்டிட்டு.. சரி அதைவிடுவம் ) இந்நிலையில்தான் அந்த விபரீதம் நடந்திருக்கிறது.
ஏற்கனவே பூனைக்கும் அவருக்கும் இருந்த முறுகல் முற்றியபோது, நடந்தது ஒரு சோகம். வீடியோவில் பாருங்கள்.
செய்வதை செய்துவிட்டு, பூனை தப்பியோடியது வீடியோவில் தெரிகிறது. ஆனால் சயந்தனுக்கு என்ன நடந்தது என்பது பற்றி இவ்வீடியோவில் விளக்கமாகப் பெறமுடியவில்லை. அதனால் மீளவும் எமது புலனாய்வு நிருபர் மேலதிக விபரங்களைப் பெற்றுவரச் சென்றிருக்கின்றார், விரைவில் மேலதிக தகவல்களோடு சந்திக்கின்றோம்.
8 comments:
உடம்பை பார்த்தால் வசந்தனை போல தான் இருக்கு. சயந்தன் ரொம்பச் சிலிமு.
ரசிகைகள் மன்றம்
தென்துருவம்
சயந்தன் வீட்டுப் பூனைக்கு நடந்தது என்ன என்று வசந்தன் ஏற்கனவே ஒரு வீடியோ பதிவு போட்டுவிட்டார்.
நீங்கள் போடுவது டுபாக்கூர் வீடியோ..
//உடம்பை பார்த்தால் வசந்தனை போல தான் இருக்கு. சயந்தன் ரொம்பச் சிலிமு.
ரசிகைகள் மன்றம்
தென்துருவம்//
ஓ அப்படியோ? சயந்தன எனக்கு நேரடி அறிமுகமில்லை. நீங்கள் ரசிகைகள் என்று சொல்லுறபடியால அவரைப்பத்தி நல்லா அறிஞ்சு வைச்சியிருப்பியள் தானே.
//சயந்தன் வீட்டுப் பூனைக்கு நடந்தது என்ன என்று வசந்தன் ஏற்கனவே ஒரு வீடியோ பதிவு போட்டுவிட்டார்.
நீங்கள் போடுவது டுபாக்கூர் வீடியோ..//
வசந்தன்ர பதிவில பூனையப் பற்றித்தான் அக்கறையாப் பேசுறார். ஆனா சயந்தனைப் பூனை பழிவாங்கின சங்கதியை மறைச்சுப்போட்டார். இதில அது வெள்ளிப்படுகுது கண்டியளோ?
சயந்தனுக்கு என்னாச்சு ?
- ஏங்கும் இதயம்
இங்கே
'ரசிகைகள் மன்றம்
தென்துருவம்'
என்ற அடையாளத்தோடு வந்தவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.
யாருக்கு இரசிகர்கள்?
அது சயந்தனுக்கான இரசிகைகள் மன்றமாக இருக்கும்பட்சத்தில் எமக்கு எந்தப்பிரச்சினையுமில்லை (ஆனா, அங்க வீட்டில பிரச்சினை எண்டது வேறகதை)
ஆனால் தென்துருவ தமிழ்வலைப்பதிவர் சங்கத்துக்கு எந்த இரசிக மன்றங்களும் இல்லை; அப்படியான மன்றங்களை நாம் ஆதரிப்பதுமில்லை.
எமது பெயரைக் களங்கப்படுத்த ஏற்படுத்தப்படும் முயற்சியிது என்பதை இத்தால் அறியத் தருகிறேன்.
(சே!!! கமல காசன் ரேஞ்சுக்கு அறிக்கைவிட வைச்சுப்போட்டாங்களே ;-( )
இன்னொரு முக்கிய விசயம்.
சயந்தன் ரொம்ப சிலிமு எண்டு சொல்லிறதன் மூலம் இந்த இரசிகைகள் மன்றம் போலி என்பது தெள்ளத் தெளிவாகிறது.
(மனுசன் கலியாணத்துக்குப்பிறகு இளைச்சுப்போயிருக்கக் கூடிய சாத்தியம் இருந்தாலும் சிலிமு என்பது அதீதமானது).
போலிகளை நம்பாதீர்.
வசந்தன் போலிகள் குறித்த உங்கள் அறிவிப்புக்களுக்கு நன்றி.
\\மனுசன் கலியாணத்துக்குப்பிறகு இளைச்சுப்போயிருக்கக் கூடிய சாத்தியம் இருந்தாலும் சிலிமு என்பது அதீதமானது\\
இதுவும் ஏற்புடையதென்றே நம்புகின்றேன்.
Post a Comment