குழவிக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் அன்மையில் புதிய தொழில் தொடங்கி தொழிலதிபர் ஆயிட்டார். முதல் மாதத்தில் நிகரலாபம் கூடக் கண்டாக தொலைபேசியில் சொன்னார். இதைக் கேட்டதும், குழவிக்கும் தொழிலதிபர் ஆகும் ஆசை வந்திட்டுது. என்ன செய்யலாம் என்று யோசித்து பிடித்ததுதான் இந்த ஐடியா.
வலைப்பதிவே வாழ்வாகக் கிடக்கும் என்னைப் போன்ற வேலைவட்டி இல்லாததுகளுக்கு வேறென்ன செய்ய முடியும். அதனால் வலைப்பதிவிலிலேய சம்பாதிக்க முடிவு பண்ணியாச்சு.
உங்களுக்குத் தேவையான, ,தேவை, தேடப்படுதல், கானவில்லை, படவிளம்பரம், வீடியோ விளம்பரம், ஒலிப்பதிவு விளம்பரம், என அனைத்துவகை விளம்பரங்களும், குறைந்த கட்டணத்தில் வலைப்பதிவுலகில் செய்துதரப்படும். எம்மூலம் விளம்பரம் செய்வோருக்கு தேவையான (பன்னி, கழுதை, நாய், கோழி, குரங்கு, கடவுளர்) படங்கள் பலவித வடிவத்தில் இலவசமாக வழங்கப்படும். அவை நீங்கள் விரும்பும் வகையில் மாற்றியும் தரப்படும்.
தொடர்புகளுக்கு:
விவரம் தெரியாதவன் விளம்பர சேவை.
வீனாய் போனவன் அவென்யு
பாரீஸ் புறநகர்.
பிரான்சு.
விளம்பர சேவை (காசு பார்க்கலாம்)
Posted by குழவி at 9 comments
இதுதான் நடந்தது. வீடியோ கிடைத்தது.
இந்த வீடியோ கிடைக்கும் வரைக்கும் நம்பமுடியாமல்தான் இருந்தது. செய்தியை அறிந்த போது, இப்படியெல்லாம் நடக்குமா என்று கூட எண்ணினோம். ஆனாலும் நடந்துதானே இருக்கிறது என்பதை வீடியோ சாட்சிப்படுத்துகிறதே. என்ன நடந்தது? என்பதை புலனாய்வு செய்த நமது நிருபர் அனுப்பியிருக்கும் வீடியோப் பதிவுகள் அதிர்ச்சி தருபவையாக இருக்கின்றன.
தமிழ்வலைப்பதிவுலகிலும், தமிழ்மணத்திலும், தன் எழுத்துக்களால் தனித்துவமான ஒரு இடத்தை நண்பர்களிடத்தில் பெற்றிருந்தவர், சாரல் வலைப்பதிவினை எழுதும் சயந்தன். இவர் சிலகாலங்களின் முன் ஒரு பதிவுக்காக தன் வீட்டுப்பூனையை படமெடுத்துப்போட்டிருந்தார். (அந்தப்படப்பின் போதே பூனை புறுபுறுத்துக் கொண்டுதானிருந்தது)அதற்குப்பின் அதை வீடியோப் படமெடுத்தும் போட்டிருக்கிறார். ( என்ன விவரம கெட்ட மனுசன் என்டு பாருங்கள். தன்னைப்படமெடுத்துப் போட்டால் அல்லவா பிரபலம் ஆகலாம். அதுக்காக ஆளாளுக்கு எப்பிடி வலைப்பதிவுகளில அலையினம் என்டதைப் பாத்த பிறகாகவது திருந்த வேண்டாமா? அதைவிட்டிட்டு.. சரி அதைவிடுவம் ) இந்நிலையில்தான் அந்த விபரீதம் நடந்திருக்கிறது.
ஏற்கனவே பூனைக்கும் அவருக்கும் இருந்த முறுகல் முற்றியபோது, நடந்தது ஒரு சோகம். வீடியோவில் பாருங்கள்.
செய்வதை செய்துவிட்டு, பூனை தப்பியோடியது வீடியோவில் தெரிகிறது. ஆனால் சயந்தனுக்கு என்ன நடந்தது என்பது பற்றி இவ்வீடியோவில் விளக்கமாகப் பெறமுடியவில்லை. அதனால் மீளவும் எமது புலனாய்வு நிருபர் மேலதிக விபரங்களைப் பெற்றுவரச் சென்றிருக்கின்றார், விரைவில் மேலதிக தகவல்களோடு சந்திக்கின்றோம்.
Posted by குழவி at 8 comments
என்ன நடந்தது? - பரபர வீடியோ -
இரண்டு சக்திகளுக்கிடையில் நடந்த ஒரு பெரும் இழுபறிச்சண்டையின் வீடியோப்பதிவு. எமது பரபர பாப்பராசி நிருபர் பதிவு செய்த இச்சண்டைக் காட்சிகளின் முழு விபரம் விரைவில். இது ஒரு முன்னோட்டம் மட்டுமே.
Posted by குழவி at 8 comments
தலித் மாநாட்டில் நடந்தது என்ன?
புலம்பெயர்ந்து வாழும் உங்களுக்கு இருக்கும் ஆவல், எங்களுக்கு இருக்காதா? . யாராவது அங்க என்ன நடந்தென்டு கொஞ்சம் சொல்லுங்கப்பா. மண்டைக்குத்து தாங்க முடியேல்ல.
Posted by குழவி at 14 comments
சும்மா சும்மா
இது தமிழ்மணம் இணைப்புக்காக ஒரு சும்மா பதிவு.
Posted by குழவி at 0 comments
Labels: பொது
குலவ வந்திருக்கும் குழவி.
எல்லாருக்கும் வணக்கம்.
நான் குழவி. கொழுவி என்று நீங்கள் வாசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. குலவும் எல்லோர்க்கும் நான் குழவி(அதுதாங்க குழந்தை). ஆனால் யாராவது குட்டினால் கொட்டுவேன் குளவியாக. மற்றும்படி எப்போதும் நான் குழவிதானுங்க.
Posted by குழவி at 5 comments
Labels: பொது