தமிழ்மணத்துக்கு ஆபத்து

சந்தர்பங்கள் வாய்க்கும் போதெல்லாம் தமிழ்மணத்திரட்டியை ஒருவித அடையாளப்படுத்தலுக்குள் கொண்டு வருவது தொடர்ந்து நடைபெற்றிருக்கிறது. இப்போது ஒரு சிறு மாற்றம். முன்னர் இந்த வேலையைச் செய்தவர்கள் திராவிட எதிர்ப்பாளர்கள். இப்போ செய்ய முனைபவர்கள் பெரியாரியமும் திராவிடமும் பேசும் பகுத்தறியாப் பகுத்தறிவுவாதிகள். கதை எப்படிப்போகுதென்று பார்க்கின்றீர்களா?


சுகுணாதிவாகரின் பதிவில் அனானியாக:

இன்னொரு சம்பவம் என்னை மிகவும் அதி ர்ச்சியடைய வைத்தது. ஜீன் 14 ந்தேதி பாரீசில் தந்தை பெ ரியாருக்காக விழா எடுக்க முயற்சித்து கனிமொழி சத்தியராஜ் கி.வீரமணி வருவதற்கு ஏற்பாடு செய்திருந்தேன். அவ ர்களும் வரஒத்துக் கொண்டிருந்தார்கள். மண்டபம் கூட ஏற்பாடு செய்துவிட்டேன். இதை அறிந்த இயக்க ஆட்கள் விழா செலவு முழுவதையும் தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் அதை அரசியலாக்கவும் முற்பட்டார்கள். அதில் இயக்கம் குறித்து சில கலை நிகழ்ச்சியை வைக்க விருப்பப்பட்டார்கள். நான் மறுத்துவிட்டேன். அதனால் பலவகையில் நிர்பந்திக்க முற்பட்டார்கள். இதில் என்னை எரிச்சல் படுத்திய விஷயம் தமிழ்நாட்டில் இருந்து அதற்கு ஆதரவு தர சொல்லியது தான். அப்படியென்றால் என் அமைப்பின் முலமாக அதை செய்ய மாட்டேன் என்று மறுத்துவிட்டேன். தமிழ்மண பிரச்சனை கூட அசியல் தான்.என்னுடைய செயல்பாடுகளும் அவ ர்களுக்கு ஆதரவாக செயல்படாததாலும் கோணேஸ்வ ரி கவிதையும் தமிழ்மணத்தை விட்டு வெளியேற்றியது. தமிழ்மணம் இயக்க ஆட்களின் கட்டுப்பாட்டில் இருக்கிருகிறது. பெய ரிலி இயக்க ஆள். (நிறைய விடயங்கள் சொல்ல இருக்கிறது தோழ ர் எனக்கு எழுத நேரமில்லை. முக்கிய வேளை இருக்கு)

ஓசை செல்லாவின் அனுப்பாவை பதிவில் தமிழிச்சியாக

முதலில் நீங்கள் யார்? புதியதாக புகுந்திருக்கும் நிர்வாகிகள் அனைவரும் தமிழ்மணம் மூலம் இயங்கும் பதிவர்களிடம் புகைப்படத்துடன் அறிமுகமசெய்ய முடிமா?

இன்னொன்று தமிழ்மணத்தில் இடது பக்க ஓரத்தில் சின்னதா படம் போட்டுக் கொண்டிருப்பீர்களே! அதான் எல்.டி.டி. சம்பந்தமான படக்காட்டசிகள்! அவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதற்கு காரணம் சொல்ல முடியுமா? அதையெல்லாம் உங்களுக்கு சொல்ல தேவையில்லை என்றால் புரிந்து கொள்ளுங்கள் திரட்டியை நீங்கள் நிர்வகிப்பதால் என்ன வேண்டுமானாலும் புடுங்கலாம் என்று மட்டும் நினைக்காதீர்கள் எல்லாவற்றிற்கும் ஓர் எல்லை உண்டு. அமெரிக்க சட்டத் திட்டத்தின்படி இயங்கும் திரட்டி தான் தமிழ்மணம்.

இந்தப்பின்னூட்டக் கருத்துக்கள் எந்தவிதமான புரிதலில் வைக்கப்பட்டிருந்தாலும், இது இணையத்தில் வைக்கப்பட்டிருப்பவை. இவை தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழ் மணத்திரட்டிக்கு நிச்சயம் ஆரோக்கியம் தருவதாகவல்லாது, ஆபத்தினைச் சேர்ப்பதாகவே அமையும். முன்பு யாரோ செய்ய நினைத்ததை, இப்போ அதற்கு மாறானவர்கள் செய்வது வேடிக்கை. அப்படிப்பார்ப்பதற்கோ, அடித்துக் கும்மி கொட்டுவதற்கோ, உரிய நேரம் இதுவல்ல. உலகெங்கும் சிறிலங்கா அரசு திட்டமிட்டு தமிழர் தொடர்பூடகங்களை அழித்து வருகின்றது. இந்தச் சூழலில் பெரும்போக்காக, விளையாட்டாகச் சொல்லிவிட்டுப்போகும் இத்தகைய வரிகளே நாளை தமிழ்மணத்துக்கு வினையாகலாம்.

தமிழ்மணத்தில் தெரிவது..


பாரு பாரு தமிழ்மணம் நல்லாப்பாரு ஒங்க மூஞ்சி நல்லாப் பாரு