கெட்டிக்காறன் புழுகு


'கெட்டிக்காறன் புழுகு எட்டு நாளைக்கு' என்டு எங்கட ஊரில சொல்லிறவ.

இப்ப அதுக்கு என்ன என்டிறியளோ?


தமிழ்ச்செல்வன தாங்க இனங்கண்டுதான் தாக்கினதென்டு 02.11.07 ல சொன்ன சிறிலங்கா அரசின்ர பாதுகாப்பு அமைச்சு, நாலு நாளில ( 06.11.07) பிளேட்ட மாத்தி, தாங்க தமிழ்ச்செல்வனத்தாக்கேல்லையாம். ஆனா புலித்தலைவர்கள் இருக்கினமென்ட தகவல் கிடைச்சதனாலதானாம் தாக்கினவை.


இது என்ன கதையென்டு விளங்கேல்ல. ஆருக்கும் விளங்கினா கொஞ்சம் சொல்லுங்கோ..

8 comments:

Anonymous said...

போன கிழமை ஒரு முசுப்பாத்தி கேள்விப்பட்டனியளே? தமிழ்ச்செல்வன் வெள்ளண ஆறு மணிக்கு அந்த வீட்டில நிற்பார் எண்டு புலிகள் தான் சொன்னவையாம், புலம்பெயர் புல"நாய்"வு அறிக்கை தெரிவிக்குது.

அதோட இவையின்ர சாவைப் பயன்படுத்தி இன்னும் பிளேன் வாங்கப் போகினமாம்.
என்ன கொடுமை இது ராமா?

Anonymous said...

பல்லிருந்தால் பூ எண்டும் சொல்லலாம்
பல்லுப்போனால் தம்பி சொன்ன மாதிரியும் சொல்லலாம்

said...

வாய்யா வால்டர். இந்த நாய்வு அறிக்கைகள் கிளப்பிற விசரச் சொல்லி மாளேலாது.

இது எந்த ராமா?

Anonymous said...

:))

Anonymous said...

MSN சேட் இருக்கா ? அல்லது யாஹூ ?

அன்புடன்
ரவி

said...

இது ஆரப்பு குளவி? என்ன ஆனைக்கோட்டைக்கே நல்லெண்ணையா? ( பின்ன எத்தின நாளைக்குத்தான் திருநெல்வேலிக்கே அல்வாவா என்டிறது)

பல்லிருந்தால் புஸ்பம் என்டு சொல்லலாம் என்டுதான் கேள்விப்பட்டிருக்கன்

said...

குழவி ஒரு கழுவி. பதிவிடுவதே படாதபாடு பட்டு. இதுக்குள்ள என்னட்டை ரவி என்னமோ கனக்கக் கேக்கிறியள. என்னத்தச் சொல்ல

Anonymous said...

நீ அவன்தானே ?